கோவை : தொண்டாமுத்தூர் அருகே எச்.ஐ.வி நோயால் பாதித்த சிறுமியைத் தாக்கிய உறவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி (30). இவரின் சகோதரி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தநிலையில், உயிரிழந்தவரின் மகள் எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டு சிரமப்பட்டு வருகிறார். இதற்கிடையில், 15 வயதே நிரம்பிய அந்த சிறுமிக்கு உடல் நிலை சரியில்லாமல் அவதிப்படுகிறார்.
இதனால் உறவினர் ஆறுச்சாமி வீட்டில் தங்கி சிறுமி உறங்கி கொண்டிருந்தார். அப்போது வெளியே சென்று வீட்டுக்கு வந்த ஆறுச்சாமி, திடீரென ஆத்திரத்துடன் காரணமேயில்லாமல் சிறுமியைத் தாக்கினார். இந்த தாக்குதலில் சிறுமிக்குத் தலையில் காயம் ஏற்ப்பட்டது.
இதையடுத்து, சிறுமியை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக ஆறுச்சாமி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நோயால் அவதிப்படும் சிறுபிள்ளை என்று கூட பார்க்காமல் உறவினரே சிறுமியைத் தாக்கியது அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.