கோவை : ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உத்தரவு பிறப்பித்ததை ஒட்டி அந்த விவாகரத்திற்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர்கள் வேலுமணி, கருப்பண்ணன் பேட்டியளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு பேரணியில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் கருப்பண்ணன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசுகையில்," பிளாஸ்டிக் தடை சட்டம் வரும் 1 -ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது. எனவே, கைப்பைகள், தண்ணீர் பாக்கெட் போன்றவை தடை செய்யப்படும். இதனால் அதற்கு மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துங்கள்," என்றனர்.
மேலும், ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து கேட்கும் போது, "தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. முதல்வர் எடுத்த முடிவில் தெளிவாக உள்ளார். ஸ்டெர்லைட் தொடர்பாக விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்வோம். எந்த மாதிரியான சூழ்நிலை வந்தாலும் தமிழக அரசு சட்டரீதியாக எதிர்கொள்ளும். பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்யப்படும்," என்றார்கள்.

அமைச்சர் கருப்பண்ணன், 20 சதவீதம் மட்டுமே பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பயன்பாடு இனி இருந்தால் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.