கோவை: கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் மக்கள் சேவை மையம் நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் குவிந்தனர்.

பாரதிய ஜனதா கட்சியின் மக்கள் சேவை மையம் மற்றும் கேட் சென்டர் இணைந்து அவினாசி சாலையில் உள்ள ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாமை இன்று நடத்தின. பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த வேலை வாய்ப்பு முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டன.

முகாமில், ஓட்டுநர் முதல் மருத்துவர்கள் வரையிலான பணிகள் மற்றும் பகுதி நேர வேலைகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் பட்டதாரிகள் மற்றும் இல்லத்தரசிகள் சுமார் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் சில நிறுவனங்கள் நேர்முகத் தேர்வை நடத்தி 500 -க்கும் மேற்பட்டோருக்குப் பணி ஆணையை உடனடியாக வழங்கினர். இது குறித்து வானதி சீனிவாசன் சிம்ப்ளிசிட்டிக்கு அளித்த பேட்டியில், "அனைவருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நோக்கத்தில் இந்த முகாம் நடத்தப்படுகிறது.

இந்த முகாம் மூலம் பல்வேறு நிறுவனங்களில் காலியாக இருக்கும் சுமார் 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதோடு, பிரதம மந்திரியின் தனி திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக நடைபெற்ற இந்த வேலை வாய்ப்பு முகாமோடு அல்லாமல் மக்கள் சேவை மையம் தொடர்ந்து இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர முயற்சிகளை மேற்கொள்ளும்." என்றார்.
வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்ற இளைஞர்கள் கூறுகையில், "பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான பணிகளே அதிக அளவில் இருந்தது. இதனால் சற்று ஏமாற்றம் ஏற்பட்டாலும், அடுத்தடுத்த கால கட்டங்களில் அனைத்துப் படிப்புகளுக்கும் சரியான முக்கியத்துவம் அளித்து முகாம் நடத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்," என்று தெரிவித்தனர்.