திருப்பூர் : திருப்பூர் மங்களம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அடுத்தாண்டு தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் எல்.கே.ஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்கும் எனக் கூறினார்.

திருப்பூர் மாவட்டம் அமைந்துள்ள மங்களம் மேல்நிலைப்பள்ளியில், மங்களம் ரோட்டரி சங்கம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகள் வழங்கும் விழா மற்றும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது . இதில் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை.கே.ராதாகிருஷ்ணன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், "அடுத்ததாண்டு முதல் அரசுப்பள்ளிகளில் புத்தகங்கள் வழங்கப்படும் போதே 10 நாட்களில் மடிக்கணினி மற்றும் மிதிவண்டிகள் வழங்கப்படும். அதேபோல், பள்ளிகளில் கல்வி கற்பிக்கப்படும்போது கவனக்குறைவாக கவனிக்காமல் விடும் பாடங்களை, கைப்பேசிகளில் உள்ள யூடியூப் மூலம் பதிவிறக்கம் செய்து வீட்டிலேயே கற்றுக்கொள்ளும் வகையிலான வசதிகள் செய்து கொடுக்கப்படும்," என்றார்.

மேலும், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் வரும் ஜனவரி 3 -ம் வாரத்திற்குள், தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படும். இதன் மூலம் அங்கன்வாடி மையங்களில் படிக்கும் 51 ஆயிரம் மாணவர்கள் உட்பட ஏழை, எளிய மாணவர்களும் பயன்பெறுவர்," என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.