கோவை : தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பாக வரும் 17 மற்றும் 18 -ம் தேதி 'மாவட்ட தலைநகரம் தேடி' போராட்டம் நடைபெற உள்ளது.

தமிழகம் முழுவதும் நடைபெறும் இப்போராட்டத்தில், கோவை மாவட்டத்தில் சுமார் 10 தாலுகாவை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் இணைந்து கோவையில் போராட உள்ளனர். இந்த போராட்டத்தின் கோரிக்கைகளாக, 50 % பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளவர்களில், அவரவர் சொந்த மாவட்டத்தில் பணிபுரிய மாவட்ட மாறுதல் வேண்டும். வி.ஏ.ஒ. அலுவலகங்களில் மின் வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் ஏற்படுத்தித் தர வேண்டும்.
மேலும், இணையதளத்தில் சான்றிதழ் பெற வரும் மக்களுக்கு உதவ அதற்கான கணினி மற்றும் இணையதள வசதிகள் வேண்டும் உள்ளிட்ட பல முக்கியமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தரக் கோரி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். வரும் திங்கள் கிழமை அன்று கோவையில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பாகப் போராட்டம் நடைபெறவுள்ளது.