கோவையில் இரும்பு வியாபாரியிடம் ரூ.50 ஆயிரம் வழிப்பறி செய்த மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

கோவை : எல் அண்ட் டி பைபாஸ் அருகே பாலக்காடு நோக்கி லாரி ஓட்டிச் சென்ற இரும்பு வியாபாரியிடம் ரூ.50 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறித்துச் சென்ற மர்ம கும்பலை காவல்துறை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை : எல் அண்ட் டி பைபாஸ் அருகே பாலக்காடு நோக்கி லாரி ஓட்டிச் சென்ற இரும்பு வியாபாரியிடம் ரூ.50 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறித்துச் சென்ற மர்ம கும்பலை காவல்துறை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த முகமது குட்டியின் மகன் அப்துல் சலாம் (44). இவர் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர் மினிலாரி மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு இரும்புகளை எடுத்துச் சென்று மொத்த விற்பனை செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதேபோல, இவர் நேற்று கேரளாவில் இருந்து இரும்பு ஸ்கிராப்களை எடுத்துக் சென்று பெங்களூரில் இறக்கி வைத்திருக்கிறார்.

இதையடுத்து, அங்கிருந்து மீண்டும் கோவை வழியாக பாலக்காடு நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இன்று அதிகாலை 5 மணி அளவில் எல் என் டி பைபாஸ் அருகே வந்த அப்துல் சிறுநீர் கழிப்பதற்காக லாரியை நிறுத்தியுள்ளார். அப்போது திடீரென வந்த ஒரு மர்ம கும்பல் அப்துல் சலாமிடம் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளது. மேலும், அந்த கும்பல் அவரின் கையிலிருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கத்தைப் பறித்து சென்றுள்ளனர்.



இந்தச் சம்பவத்தை அடுத்து அப்துல் சலாம் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலின்பேரில் போத்தனூர் காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து சி.சி.டி.வி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...