கோவை : காருண்யா பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருக்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த மாணவன் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரபாத் குமார் என்பவரின் மகன் அம் பேர் பிரசாந்த் கால் கோ (26). இவர் காருண்யா பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தேர்வுக்காக தங்கிப் பயின்று வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு வட மாநில மாணவர் அறை மாலையிலிருந்து பூட்டி இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்த மாணவர்கள் ஆசிரியருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, விடுதியில் இருக்கும் பொறுப்பாளர்கள் மாணவனின் அறையை தட்டிய போது உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டிருந்தது தெரிய வந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, மாணவன் நைலான் கயிற்றால் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, விடுதி பொறுப்பாளர் காருண்யா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பின்னர் வந்த காவல்துறை மாணவனின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், மாணவன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி விடுதிக்குள் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.