கோவை : மேட்டுப்பாளையம் சாலையில் ஓடும் அரசு பேருந்தில் முன்பக்க கண்ணாடி எதிர்பாராத நேரத்தில் உடைந்து விழுந்த சம்பவம் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : மேட்டுப்பாளையம் சாலையில் ஓடும் அரசு பேருந்தில் முன்பக்க கண்ணாடி எதிர்பாராத நேரத்தில் உடைந்து விழுந்த சம்பவம் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உதகையில் இருந்து பாலக்காடு நோக்கி அரசு விரைவு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து மேட்டுப்பாளையம் சாலையில் நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே கே.எஸ்.பி நிறுத்தம் வரும் போது, பேருந்தின் முன் பக்க கண்ணாடியானது திடீரென உடைந்து விழுந்தது. இதில் பயணிகள் மற்றும் ஒட்டுநர் என யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இருப்பினும், கண்ணாடி உடைந்து விழுந்ததால் பயணிகள் இடையே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "வண்டியின் அழுத்தம் காரணமாக கண்ணாடி உடைந்திருக்கும். அனைத்துப் பேருந்துகளும் முறையாக பராமரிக்கப்பட்டு தான் செயல்படுகின்றன," என்றார்.