நீலகிரி : நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சுற்றுலாப்பயணியின் கார் திடீரென மின் கம்பத்தில் மோதி நின்றதால் போக்குவரத்து பாதிப்படைந்தது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜார், கூடலூர் - உதகை சாலையில் பழைய பேருந்து நிலையம் சிக்னல் பகுதியில் உதகையில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வந்தது. யாரும் எதிர்பாராத விதத்தில் வேகமாக வந்த அந்த கார் சாலை ஓர மின் கம்பத்தில் மோதி நின்றது. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் நீண்ட வரிசையில் நின்றன.

இதையடுத்து, காவல்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து காரை தள்ளி நிறுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து காரணமாக இந்தச் சாலை வழியாகச் செல்லவிருந்த பெங்களுர், கேரளா வாகனங்கள் சுமார் 2 மணிநேரம் சாலை நெரிசலில் சிக்கி தவித்தது.