கோவை : பல முறை தன்னுடைய கல்வி சேவைக்காக கவுரவிக்கப்பட்ட தலைசிறந்த ஆசிரியர் என். பெர்னாட் தன்னுடைய கல்விச் சேவையை நிறுத்திக் கொண்டார்.

இன்று காலையில் ஸ்டேன்ஸ் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் முதல்வர் என்.பெர்னாட் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவர் 1984 -ம் ஆண்டு முதல் 2000 - ம் ஆண்டு வரை ஸ்டேன்ஸ் பள்ளியின் முதல்வராகப் பணியாற்றினார். அவர் பணியாற்றிய அந்த காலத்தை ஸ்டேன்ஸ் பள்ளியுடைய பொற்காலம் என்றே கூறலாம். 150 வருட வரலாற்றுச் சிறப்பு அம்சங்களை உடைய அந்தப் பள்ளியின் வளர்ச்சிக்கு பெர்னாட் அரும்பாடுபட்டார்.

மேல்நிலை வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கான ஆங்கில வகுப்பில் தேர்ந்து விளங்கிய இவர் தமிழக அரசின் சிறந்த சேவைக்கான விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய பணிக்காலத்தில் ஒப்பற்ற தலைமைப் பண்புகளுடன் விளங்கிய இவரால் ஸ்டேன்ஸ் பள்ளியில் பல்வேறு தரப்பட்ட மேம்பாடு பணிகள் நடைபெற்றன. அதில் 1998 - ம் ஆண்டு அவர் ஏற்படுத்திய வசதிகளில் உள் அரங்க விளையாட்டு அடைந்த முன்னேற்றம் அளப்பரியது.
மேலும், அவர் ஆங்கிலம் மட்டும் அல்லாது என்.சி.சி, அறிவியல் போன்றவற்றையும் கற்றுக் கொடுப்பதில் வல்லவர். அவருடைய திறமைக்கு பலனாக 1997 - ல் ஜனாதிபதி விருதான 'கல்வித் துறையில் சிறந்த சேவைக்கான விருது' கிடைத்தது. அதேப்போலவே, 1993 - ம் ஆண்டு தமிழக அரசு, கல்வித்துறையில் அவருடைய சிறப்பான சேவையைப் பாராட்டி விருது வழங்கிக் கவுரவித்தது. மேலும், அவர் கல்வி மற்றும் உடற்கல்வி பிரிவில் கற்றலுக்கான பல ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்துள்ளார்.

இத்தனை சேவைகளை தன் வாழ்நாளில் புரிந்து பல்வேறு, மாணவச் செல்வங்களை உருவாக்கிய பெர்னாட், கோவை சபர்பன் பள்ளியில் தன் தொடக்கக் கல்வியை பயின்றார். அதன் பின் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். ராமகிருஷ்ணா வித்யாலாவில் ஆசிரியர் பயிற்சியை முடித்துக் கொண்டு சி.எஸ்.ஐ யூனியன் பள்ளியில் தன்னுடைய முதல் பணியினை தொடங்கினார். இதற்கடுத்து, 1982 - ம் ஆண்டு ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியராக மாறினார். 1984 - ம் ஆண்டு பள்ளியின் முதல்வராக உயர்ந்தார்.
தொடர்ந்து அவர் மாணவ சமுதாயத்திற்கு இவ்வளவு சேவையாற்ற அவரது மனைவி ஹெப்சிபா மற்றும் இருமகன்கள் பிரின்ஸ் மற்றும் லாரன்ஸ் ஆகியோர் உறுதுணையாக இருந்துள்ளனர்.