கோவை : கோவையில் கந்து வட்டிக் கொடுமையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் தெலுங்குபாளையத்தைச் சேர்ந்தவர் பெருமாள்சாமியின் மகன் மூர்த்தி (37). இவர் தனது பத்திரத்தை வைத்து ரூ.3 லட்சம் வீட்டுக்குத் தெரியாமல் கடன் வாங்கியுள்ளார். இதனையடுத்து, மூர்த்திக்கு கடன் கொடுத்தவர் ரூ.3 லட்சத்துக்குப் பதிலாக ரூ.36 லட்சம் கொடுக்க வலியுறுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு முன்பும் ஒருமுறை பணம் கொடுத்தவர் மிரட்டியதால், தற்கொலை முயற்சி மேற்கொண்ட மூர்த்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளார். இந்நிலையில், கடன் கொடுத்தவர் தொடர்ச்சியாக மிரட்டுவதாகக் கூறி இன்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மூர்த்தி, நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம் அருகே வைத்து பூச்சி மருந்தைக் குடித்தார்.

இதை அறிந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் 108 -க்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த பந்தய சாலைக் காவல் துறையினர் மயக்க நிலையில் இருந்தவரை மீட்டு அவசர ஊர்தி மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.