திருப்பூர் : திருப்பூர் கெமிக்கல் குடோனில் தீ விபத்து ஏற்பட்டதில் ரசாயன கேன்கள் வெடித்துப் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளன.

திருப்பூர் வாலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருக்குச் சொந்தமான கெமிக்கல் குடோன் குமரன் சாலையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான கெமிக்கல் பொருட்கள் எரிந்து சேதமானது.

இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு தீயணைப்பு துறையினர் 6 தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். குடோன் முழுவதும் சாயமிட பயன்படும் வேதிப்பொருட்கள் வைத்திருந்ததால் கெமிக்கல் கேன்களில் தீ பிடித்து, அனைத்தும் வெடித்துச் சிதற துவங்கின. இந்நிகழ்வால் தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

மேலும், குடோனில் இருந்த ஒரே கதவு வழியாகத் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க வேண்டி இருந்ததால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து, தீயை அணைக்க நுரைவகை தீயணைப்பான்கள் பயன்படுத்தப்பட்டது. தீயை அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டும் தீ கட்டுக்குள் வராததால் மண் மற்றும் சுண்ணாம்புகளை கொட்டி 2 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.