சோதனை எலிகளாகப் பயன்படுத்தப்படும் ஏழை மனித உயிர்கள் : கண்காணிக்கப்படுமா கோவை பரிசோதனை கூடங்கள் ?

கோவை : ஏழ்மையைப் பயன்படுத்தி ஆபத்தான பரிசோதனைகளை செய்யும் தனியார் பரிசோதனை மையத்தால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கோவை : ஏழ்மையைப் பயன்படுத்தி ஆபத்தான பரிசோதனைகளை செய்யும் தனியார் பரிசோதனை மையத்தால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.



பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஸ்ணமூர்த்தி (36). இவர் கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள காஸ்டிங் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். இவர் தன்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக, நண்பர் ஒருவரின் மூலம் வெள்ளகிணறு அருகில் உள்ள ஸ்பினாஸ் என்னும் லேப்பில் சத்து மாத்திரை ஆய்வு பரிசோதனைக்கு சென்றுள்ளார். 

இதையடுத்து, அங்கு சென்ற கிருஷ்ணமூர்த்தியை முழு உடல் பரிசோதனை செய்து விட்டு, மனித உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதற்கான ஆய்வு செய்ய போவதாகத் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கொழுப்புத் தன்மையை அதிகரிக்க, தேவைக்கு அதிகமாகவே கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவை மூர்த்திக்கு கொடுத்துள்ளனர். அதேபோலவே, கொழுப்பை அதிகரிக்கும் மருந்து, மாத்திரைகளைக் கொடுத்தும் ஆய்வு செய்துள்ளனர். 

இந்த தகவல்களை தெரிவித்த கிருஷ்ணமூர்த்தியின் ரத்தத்தை, ஆய்வின் போது 1 மணி நேரத்திற்கு ஒரு முறை என 5 முறைக்கு மேல் ஆய்வு செய்துள்ளனர். அதிகளவு கொழுப்பினை கொடுத்ததால் அவருக்கு இதயப்பகுதியில் அடைப்பு ஏற்பட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.



இது குறித்து பாதிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், "என் குழந்தை மற்றும் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவ செலவுக்கு நண்பர் சரவணனிடம் ரூ.2 ஆயிரம் பணம் கேட்டிருந்தேன். ஆனால், சரவணனிடம் பணம் இல்லாததால் சத்துமாத்திரை பரிசோதனை நிலையத்தில் ஆய்வுக்குச் சென்றால் பணம் கிடைக்கும். நானும் சிரமமான நேரத்தில் அங்கு தான் செல்வேன் என்றார்.

 

இதையடுத்து, நானும் அங்கு சென்றேன். அங்கு கொழுப்பை குறைப்பதற்கான புதிய மருந்தாய்வுக்கு உட்படுத்த உள்ளதாகவும், 3 நாட்கள் தங்கி ஆய்வு செய்தால் ரூ.8 ஆயிரம் தருவதாகவும் தெரிவித்தனர். அதனோடு எனக்கு எந்த வித பக்க விளைவும் கிடையாது என நம்பிக்கை ஊட்டினர். ஒருவேளை ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டால் முழுப் பொறுப்பும் நிர்வாகம் எடுத்து கொள்வதாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், என் உடலில் அதிக கொழுப்பு ஏறி இதய பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நான் எனது உடல் பாதிப்புக்கு தீர்வு கேட்க முயன்றேன். ஆனால், என் உடலில் ஏற்பட்ட பாதிப்புக்கும், ஆய்வு நிலையத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாதது போல் பதிலளிக்கின்றனர். வறுமையினால் இந்தச் சூழலுக்கு தள்ளப்பட்ட என்னை அந்த ஆய்வகம் பயன்படுத்திக் கொண்டது.

இது போன்ற மோசமான நிலைக்கு யாரும் வரக்கூடாது. பாதிக்கப்பட்ட நான் வழக்கறிஞர் மூலம் புகார் அளித்துவிட்டேன். இது போல இன்னும் எத்தனைப் பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என்பது தெரியவில்லை. ஆகவே, காவல்துறை அதிகாரிகளும், மருத்துவ அதிகாரிகளும் இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு தர வேண்டும்," என்றார்.

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...