மேட்டுப்பாளையத்தில் யானைகள் புத்துணர்வு முகாமை எதிர்த்து முற்றுகை போராட்டம் : 50 பேருக்கு மேல் கைது

கோவை : கோவை, மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானியாற்று கரையோரப்பகுதியான தேக்கம்பட்டி என்னுமிடத்தில் இன்று தொடங்கிய கோவில் யானைகளுக்கான நலவாழ்வு புத்துணர்வு முகாமிற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

கோவை : கோவை, மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானியாற்று கரையோரப்பகுதியான தேக்கம்பட்டி என்னுமிடத்தில் இன்று தொடங்கிய கோவில் யானைகளுக்கான நலவாழ்வு புத்துணர்வு முகாமிற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் பவானியாற்று கரையோரப்பகுதியான தேக்கம்பட்டியில், கடந்த 2012 -ம் முதல் கோவில் யானைகளுக்கான நலவாழ்வு புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கிய அந்த முகாம் தொடர்ந்து 48 நாட்கள் வரை நடைபெறவிருக்கிறது. 

இந்நிலையில், முகாமிற்குத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களில் இருந்து 27 யானைகள் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இங்கு முகாம் நடத்துவதால் இப்பகுதி சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து விடுவதாகவும் இதனால் விவசாய நிலங்களில் கடும் சேதங்கள் ஏற்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. 

இதன் அடிப்படையில், கோவில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் பவானியாற்று கரையில் நடத்த எதிர்ப்பு தெரிவித்து தேக்கம்பட்டி மற்றும் இதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் தங்களின் வீடுகள் மற்றும் வீதிகளில் கறுப்புக்கொடிகளை கட்டியுள்ளனர். 

இதற்கிடையில், இன்று யானைகள் முகாம் தொடங்கியதிற்கு எதிர்ப்பு தெரிவித்து வன பத்திரகாளியம்மன் கோவில் முன் தேக்கம்பட்டி 23 கிராம விவசாய ஒருங்கிணைப்புக் குழு சார்பில் முகாமினை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. அதில் முற்றுகையில் ஈடுபட முன்னேறி வந்த 50 -க்கும் மேற்பட்டோரை காரமடை காவல்துறை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 



அப்போது விவசாயிகளுக்கு இடையூறாக இருக்கும் யானைகள் முகாமினை நடத்தக் கூடாது என அவர்கள் கோசங்களை எழுப்பியதால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...