கோவை : கவுண்டம்பாளையம், செயின்ட் ஜோசப் சர்ச் இளைஞர்கள் ஒன்றிணைந்து கிறிஸ்துமஸ் பண்டிகையைச் சிறப்பாக கொண்டாட 70 அடி உயர நட்சத்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள் கிறிஸ்துமஸ் பண்டிகையாகக் கொண்டாடப்படும். அதற்காக பல்வேறு விதமான பரிசு பொருட்கள், அலங்கார ஜோடனைகள் என ஒவ்வொரு ஆலயமும் கோலகலாமாகக் காணப்படும். அதைப்போலவே, கோவையைச் சேர்ந்த கவுண்டம்பாளையம் செயின்ட் ஜோசப் சர்ச்சிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஏற்பாடு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதையடுத்து, கவுண்டம்பாளையத்தில் அமைந்துள்ள தேவாலயத்தில், இளைஞர்கள் ஒன்றிணைந்து கிறிஸ்துப் பிறப்பின் குறியீடாக வழங்கப்படும் நட்சத்திரத்தை 70 அடி உயரத்தில் அமைத்துள்ளனர். இந்த வருடம் புதிதாக கட்டப்பட்டுள்ள அந்த ஆலயத்தில் 2 வாரங்களாக முழு முயற்சி செய்து இந்த அற்புத நட்சத்திரத்தை உருவாக்கியுள்ளனர். இதில் ஈடுபட்ட இளைஞர்களை ஆலய பாதிரியார் வர்கீஸ் உற்சாகப்படுத்தினார்.