உடுமலையில் அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்தக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்தக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் உடுமலை வட்டாய்ச்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்தக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் உடுமலை வட்டாய்ச்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வடக்கு மாநகர குழுவின் சார்பில், அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கக்கோரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று உழைப்பு தானம் மேற்கொண்டனர். 

இந்நிலையில், அவர்கள் கோரிக்கை இன்னும் நிறைவேறாத காரணத்தால் கண்டன ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆர்பார்ட்டத்தில் அவர்கள் வைத்த குற்றச்சாட்டுகளும், கோரிக்கைகளும் பின்வருமாறு :- உடுமலை அரசு மருத்துவமனையில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. 

மேலும், அரசு மருத்துவா்கள் தங்களது சொந்த க்ளினிக்கில் வேலை பார்க்கவே நேரம் ஒதுக்குகின்றனர். அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளைச் சிகிச்சை அளிக்காமல் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பணம் சம்பாதிப்பதைக் குறியாக வைத்துச் செயல்படுகின்றனர். இதனால் உடுமலை, மடத்துக்குளம் ஆகிய இரண்டு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை இல்லாமல் பொதுமக்கள் தவிக்க நேரிடுகிறது.

இதற்கிடையே, உயர் சிகிச்சைகள் அளிக்கத் தேவையான அனைத்து மருத்துவ கருவிகள் இருந்தும் அதைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்காமல் ஏழை மக்களை ஏமாற்றி வருகிறார்கள். மேலும், ஸ்கேன் வசதிகள் இருந்தும் இல்லை எனக் கூறுகின்றனர். போதிய மருத்துவர்கள் இல்லாமல் போனாலும் கூட அனைத்து பிரிவிலும் லஞ்சம் ஊழல் தலை விரித்தாடுகிறது உட்பட பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், தரமான அரசு மருத்துவமனை வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

மேலும், இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் உடுமலை வட்டாய்ச்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்றது.

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...