ரபேல் ஒப்பந்த முறைகேடு புகார் மீது விசாரணைக்கு உத்தரவிட முடியாது : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி : ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்குச் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக அளித்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.

புதுடெல்லி : ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்குச் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக அளித்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. 

கடந்த 2012 -ம் ஆண்டு பிரான்ஸ் அரசுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்தது. அந்த ஒப்பந்தம் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்றது. காங்கிரஸ் அரசு பிரான்ஸ் நாட்டில் இருந்து 126 ரபேல் போர் விமானங்களை வாங்க முடிவு செய்தது. பின்னர் அந்த ஒப்பந்தத்தை காங்கிரஸ் அரசு ரத்து செய்துவிட்டது. இந்நிலையில், தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு பிரான்ஸ் நாட்டிடம் ரபேல் போர் விமானங்கள் வாங்குவது பற்றி மீண்டும் பேசியுள்ளது.

இதையடுத்து, பிரான்ஸ் நாட்டுடன் மத்திய அரசு 2015 -ம் ஆண்டு ஏப்ரலில் புதிய ஒப்பந்தம் ஒன்றினை கையெழுத்திட்டது. அதன்படி, “ரபேல் போர் விமானத்துக்கான 50% உதிரிப்பாகங்களை இந்தியாவில் உள்ள நிறுவனத்திடம் இருந்து பிரான்சு கொள்முதல் செய்ய வேண்டும்” என நிபந்தனை முன் வைக்கப்பட்டது. இதற்கிடையில் இந்த ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் சாடின. இதற்கு ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பு தெரிவித்தார். 

மேலும், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது எனவும் மறுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தம் குறித்து உச்சநீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, வழக்கறிஞர் எம்.எல்.சர்மா மனுதாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து வழக்கறிஞர் வினீத் தண்டா, ஆம் ஆத்மி பிரமுகர் சஞ்சய் சிங், முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி மற்றும் வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் அதே கோரிக்கைகளுடன் வழக்கு பதிவு செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தனர்.

கடந்த மாதம் தொடுக்கப்பட்ட வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது. இந்நிலையில், தலைமை நீதிபதி அமர்வு, இம்மனுக்கள் மீது இன்று தீர்ப்பு அளித்தது. அப்போது ரபேல் விமான விகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன் விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தனர். 

ரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் என்றும், அரசின் கொள்கை சார்ந்த முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...