பயிர் சேதம் விளைவிக்கும் காட்டு யானைகளை விரைந்து அப்புறப்படுத்தக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் கடிதம்

கோவை : கோவையில், தொடர்ந்து யானைகளால் கடும் அவதிக்குள்ளாகும் விவசாயிகளின் மனு மற்றும் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர வனத்துறைக்கு கோவை மாவட்ட ஆட்சியர் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

கோவை : கோவையில், தொடர்ந்து யானைகளால் கடும் அவதிக்குள்ளாகும் விவசாயிகளின் மனு மற்றும் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர வனத்துறைக்கு கோவை மாவட்ட ஆட்சியர் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.



கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் தொடர்ந்து நடக்கும் யானை- மனித மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர முதன்மை வனவிலங்கு பாதுகாவலருக்கு மாவட்ட ஆட்சியர் ஹரிகரன், கடந்த மாதம் 20 -ம் தேதி கடிதம் அனுப்பினார். ஆனாலும், இன்னும் கூட அந்தப் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. எனவே, மீண்டும் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கினர். 

இதனைக் கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் மீண்டும் வனத்துறைக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளார். இந்தக் கடிதமானது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை தலைவர் (தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்) ஷம்பு கல்லோலிக்கருக்கு அனுப்பப்பட்டது. அந்தக் கடிதத்தின் சாராம்சம் முந்தைய கடிதத்தினைப் போலவே எழுதப்பட்டிருந்தது. 

பரிந்துரை கடிதத்தின் சாராம்சம் :- வனத்துறையினர், காடுகளில் இருந்து வெளியே வரும் யானைகளை மனித வாழிடங்களில் நுழையவிடாமல் தடுக்க கடுமையாக முயன்ற போதிலும் அவை பயிர் சேதத்தை விளைவித்து விடுகின்றன. கடந்த ஆறு மாத காலத்தில் வரப்பாளையம், பணிமடை, பெரியதடாகம், சின்ன தடாகம் போன்ற பகுதிகளில் தக்காளி, சோளம், வாழை, தென்னை உள்ளிட்ட பல பயிர்களைக் கும்கி யானைகள் சேதப்படுத்திக் கொண்டிருக்கின்றன. 

இதற்கிடையில், யானைகளை வெளியேற்றும் முயற்சியை மேற்கொண்ட ஆர்.ஆர்.டி-யை (RRT) வெங்கடேஷ் (28), அம்முயற்சியில் காட்டு யானையால் கொடூரமாக தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். எனவே, வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து யானைகளை அப்புறப்படுத்தி, முதுமலை காடுகளில் கொண்டு விட வேண்டும்," என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், இதே சாராம்சம் கொண்ட கடிதம் மாவட்ட வன பாதுகாப்பாளருக்கும், தலைமை பாதுகாப்பாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...