நீலகிரி : மேட்டுப்பாளையம் சந்தையில் உருளைக்கிழங்குகளுக்கு போதிய வருமானம் ஈட்ட முடியாததால், உதகை விவசாயிகள் மாடுகளைக் கொண்டு ஏர் உழவு செய்தனர்.

நீலகிரி மாவட்டத்தில், கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், காளிப்பிளவர், உருளைக்கிழங்கு, பீன்ஸ், முள்ளங்கி போன்ற மலைக் காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன. இந்தக் காய்கறிகள் மலைப்பிரதேசத்தில் நல்ல விளைச்சலைத் தரக்கூடியது. எனவே, அவற்றைச் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், மலைச்சரிவுகளில் காய்கறி விவசாயம் அதிகம் மேற்கொள்ளப்படுவதால் அதனைப் பராமரிக்க விவசாயிகள் அதிகம் முயற்சிகள் எடுப்பர்.
இந்நிலையில், சில நேரங்களில் மலைக்காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் போவதால், செலவழித்த தொகையைக் கூட எடுக்க முடியாமல் விவசாயிகள் நஷ்டம் அடைகிறார்கள். தற்போது உதகை பெர்ன்ஹில் பகுதியில் உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. அதற்கு உரம், பூச்சிக்கொல்லிமருந்து எனப் பராமரிப்புக்கு அதிகளவில் செலவாகியுள்ளது.
மேலும், பெண் தொழிலாளர்களுக்கு கூலி ரூ.300-ம், ஆண் தொழிலாளர்களுக்கு ரூ.500 -ம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து மேட்டுப்பாளையம் சந்தைக்கு உருளைக்கிழங்கு விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. இதனால் உதகையில் அதிகளவில் உற்பத்தியாகும் உருளைக்கிழங்குகளின் வீழ்ச்சி அடைகிறது.
இதையடுத்து, முதல் சீசனில் 45 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.1400 முதல் ரூ.1700 வரை விற்பனையானது. தற்போது 2-ம் சீசனில் ரூ.900 முதல் ரூ.1200 வரை மட்டுமே விலை நிர்ணயம் செய்யப்பட்டது. வெளி மாநில கிழங்கு வரத்து அதிகரிப்பால் உள்ளூர் உருளைக்கிழங்கின் விலை சரிந்தது. இதனால் விவசாயிகள் பயிருக்காக செலவிட்டதை எடுக்க முடியாமல் பெரும் நஷ்டம் அடைந்து கவலையில் உள்ளனர்.

இப்படியாக, தொடர்ந்து நிகழும் உருளைக்கிழங்கு விலை வீழ்ச்சியினால் உதகை பெர்ன்ஹில் பகுதியில் ஒரு விளைநிலத்தில் தொழிலாளர்களுக்கு பதிலாகக் காளை மாடுகளைப் பூட்டி ஏர் உழுது உருளைக்கிழங்கு அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. சமவெளிப் பகுதியில் மாடுகளைக் கொண்டு நிலத்தில் ஏர் உழுதல் எளிதானது. ஆனால், மலைச்சரிவுகளில் ஏர் உழுது அறுவடை செய்வது சவாலான விஷயம்.
இந்நிலையில், ஒரு முறை உழுதவுடன், மண்ணுக்குள் இருந்து உருளைக்கிழங்கு மேற்பகுதிக்கு வந்தது. இதனைத் தொழிலாளர்கள் சேகரித்து கூடையில் நிரப்பினர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "உதகை உருளைக்கிழங்கு எப்போதுமே தனிச்சுவை உள்ளது. தற்போது விலை வீழ்ச்சியால், தொழிலாளர்களுக்குக் கூலி, உரம், மருந்துகள்,பராமரிப்பு செலவுகளை ஈடு செய்ய முடியவில்லை.
முன்பு அதிக தொழிலாளர்களைக் கொண்டு கொத்து போட்டு உருளைக்கிழங்கை அறுவடை செய்து வந்தோம். தொழிலாளர்களுக்கு கூலித் தொகை அதிகமாக உள்ளதால், காளை மாடுகளைப் பூட்டி ஏர் உழுது அறுவடைசெய்து வருகிறோம். இந்த முறையில் அறுவடை செய்வதால் காலவிரயம் தவிர்க்கப்படுகிறது. இதையடுத்து, அறுவடை செய்யப்பட்ட உருளைக்கிழங்கு லாரி மூலம் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
இதற்கிடையில், மேட்டுப்பாளையம் சந்தையில் வெளியிடங்களில் இருந்தும் உருளைக்கிழங்கு வருவதால், ஊட்டி உருளைக்கிழங்குக்கு கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. மேலும், சில விவசாயிகள் விலை வீழ்ச்சி காரணமாக அறுவடை செய்யாமல் உள்ளனர். இனி வரும் காலங்களில் ஆவது நீலகிரி மாவட்ட உருளைக்கிழங்குக்கு விலை உயர்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம்," எனத் தெரிவித்தனர்.