திருப்பூரில் அமைச்சர்கள் வருகையையொட்டி சாலையோர மக்களை அப்புறப்படுத்தியதைக் கண்டித்து போராட்டம்

திருப்பூர் : திருப்பூரில் தனியார் உணவக திறப்புவிழாவிற்கு அமைச்சர்கள் வருகை தந்ததால், 15 வருடமாகச் சாலையோரம் வசித்து வந்த மக்களை மாநகராட்சி நிர்வாகம் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பூர் : திருப்பூரில் தனியார் உணவக திறப்புவிழாவிற்கு அமைச்சர்கள் வருகை தந்ததால், 15 வருடமாகச் சாலையோரம் வசித்து வந்த மக்களை மாநகராட்சி நிர்வாகம் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பூர் கஜலட்சுமி தியேட்டர் அருகே உள்ள நொய்யல் கரையோரம் 50 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் பெனாயில் தயாரித்து விற்றல், கூடை பின்னுதல் உள்ளிட்ட குடிசைத்தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவர்கள் அப்பகுதியில் 15 ஆண்டுகளாகச் சிறிய அளவிலான குடில் அமைத்து வசித்து வருகின்றனர். அவர்களுடைய குழந்தைகளும் அருகில் உள்ள அரசுப்பள்ளியில் பயின்று வருகின்றனர். 



இந்நிலையில், கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பே அவர்களுக்கு இடம் ஒதுக்குவதாக உத்தரவாதம் அளித்த மாநகராட்சி நிர்வாகம் இன்னும் இடம் கொடுக்காததால் சாலையோரத்திலேயே வசித்து வந்தனர். இதற்கிடையில், அதே சாலையில் அதிமுக பிரமுகரின் விடுதி திறப்பு விழாவிற்காக நாளை அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி ஆகியோர் வருகை தரவுள்ளதால் சாலையோர மக்களைக் காவல்துறையினர் உதவியோடு, இன்று அவசர அவசரமாக மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தினர். 



இதையடுத்து, இன்று மாநகராட்சி நிர்வாகம் அவர்களுக்காகத் தனி இடம் ஒதுக்கியது. அந்த இடத்திற்குச் சென்ற மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெறாததால், மீண்டும் அதே பகுதிக்கு வந்து சாலையோரத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 



இது குறித்து அவர்கள் கூறுகையில், "இத்தனை நாட்கள் எங்களை காலிசெய்ய சொல்லாத மாநகராட்சி நிர்வாகம் நாளை அமைச்சர் வருகை என்பதால் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாத இடத்திற்கு எங்களை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று விடுகிறது. உரியப் பாதுகாப்பும் அடிப்படை வசதியும் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் எங்களின் பகுதியில் உள்ள 35 குடும்பத்தினரும் குழந்தைகளோடு தற்கொலை செய்து கொள்வோம்," என தெரிவித்தனர். 

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...