கோவையில் இருசக்கர வாகனம் மீது ஆடி கார் மோதியதில் கணவன், மனைவி பலி

கோவை : கருமத்தம்பட்டி அருகே அதிவேகமாக வந்த ஆடி கார் மோதியதில் கணவன் மனைவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : கருமத்தம்பட்டி அருகே அதிவேகமாக வந்த ஆடி கார் மோதியதில் கணவன் மனைவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி (60). இவர் நெசவுத் தொழில் செய்து வருகிறார். இன்று காலை சுமார் 10 மணியளவில் துரைசாமி அவரது மனைவி மாராத்தாலையை (55), தனது டிவிஎஸ் எக்.ஸெல் வாகனத்தில் கணியூர் டோல் கேட்டை தாண்டி அவிநாசி சாலையில் அழைத்துச் சென்றிருக்கிறார். அதே நேரத்தில் Tn 39 BH 1588 என்ற எண் கொண்ட ஆடி காரானது அதிவேகமாகக் கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. 

இதையடுத்து, வேகமாக வந்த ஆடி காரானது நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் கணவன் மனைவி இருவரும் ஆபத்தான சூழ்நிலையில் நீலம்பூர் பகுதியில் உள்ள ராயல் கேர் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். 

இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக இருவர் உடலும் கொண்டு செல்லப்பட்டது. மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி வந்த திருப்பூரைச் சேர்ந்த தினேஷ் பாண்டியன் (30) என்பவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...