கோவை : பொள்ளாச்சி பகுதியில் உள்ள விவசாயிகளின் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் டிராக்டா் டிரைலா்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினா் சி.மகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி விவசாயிகள் நிறைந்த பகுதி ஆகும். அங்கு டிராக்ட்டர் டிரைலர்களுக்கு 3 டன் எடை அளவிற்கும், தண்ணீர் டேங்க் டிரைலர்களுக்கு 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவிற்கும் மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இதனை அதிகரித்து வழங்க வேண்டும் என மகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்தக் கோரிக்கையில், தொண்டாமுத்தூா், கிணத்துகடவு, பொள்ளாச்சி, வால்பாறை உடுமலை, மடத்துக்குளம் பகுதிகள் விவசாயம் நிறைந்த பகுதியாகும். ஆதலால், இத்தொகுதி முழுமையாக விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளது. எனவே, அப்பகுதிகளுக்கு டிராக்ட்டர் டிரைலர்களுக்கு 6 டன் எடை அளவிற்கும், தண்ணீர் டேங்க் டிரைலர்களுக்கு 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவிற்கும் என எடையை அதிகப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற, இன்று டெல்லியில் மத்திய விவசாயத் துறை அமைச்சர் ராதாமோகன் சிங் அவர்களையும், மத்திய போக்குவரத்து செயலாளர் யுத்வீர் சிங் மாலிக் அவர்களையும் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் நேரில் சந்தித்து மனு அளித்தார்.
இதனையடுத்து, மத்திய விவசாயத் துறை அமைச்சர் ராதாமோகன் சிங் மனுவினை பரிசீலனை செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.