மருத்துவமனைகள் ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் மூலம் சிறிய மருத்துவ நிறுவனங்களை ஒழிக்க முயற்சி - மருத்துவர் ரவீந்திரநாத் விளக்கம்

கோவை : கார்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாக 20 ஆயிரம் இரத்த பரிசோதனை நிலையங்களை மூட மத்திய, மாநில அரசு முயற்சிப்பதாகச் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநில பொது செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை : கார்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாக 20 ஆயிரம் இரத்த பரிசோதனை நிலையங்களை மூட மத்திய, மாநில அரசு முயற்சிப்பதாகச் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநில பொது செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை பிரஸ் கிளப் அரங்கில் செய்தியாளர்களிடம் மருத்துவர் ரவீந்திரநாத் பேசுகையில், "மருத்துவத்துறையில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையிலும், மருத்துவமனைகள் ஒழுங்குபடுத்தும் சட்டத்தை மாநில அரசு அமல்படுத்துவதை வரவேற்கிறேன். அதே சமயம் இச்சட்டத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி சிறிய மருத்துவ நிறுவனங்களை ஒழிக்க முயற்சி நடக்கிறது. 



சிறிய இரத்த பரிசோதனை நிலையங்கள் கிராமங்களில் மக்கள் நலன் சார்ந்து சேவை செய்கின்றன. தமிழகத்தில் கார்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாக 20 ஆயிரம் இரத்த பரிசோதனை நிலையங்களை மூட மத்திய,மாநில அரசு முயற்சிக்கிறது. இரத்த பரிசோதனை நிலையங்களுக்கு 100 சதுர அடி போதுமென தமிழக அரசின் அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும். 

குறிப்பாக, அங்கீகரிக்கப்படாத கல்வி நிலையங்களில் படித்த லேப் டெக்னீசியன்கள் தொடர்ந்து பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான கட்டணத்தை ரூ.500 ஆக குறைக்க வேண்டும். இந்தியாவில் 38% ஆரம்ப சுகாதார நிலையங்களில் லேப் டெக்னீசியன்கள் இல்லை. வட்டார மருத்துவமனையில் 40% வரை லேப் டெக்னீசியன் காலியிடம் உள்ளது.

ஏற்கனவே, தமிழகத்தில் 3 பன்றி காய்ச்சல் பரிசோதனை மையங்கள் மட்டுமே உள்ளது. இதற்கிடையே, டெங்கு,பன்றி காய்ச்சல் பாதிப்புகளை மறைக்க அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். டெங்கு, பன்றி காய்ச்சல் அறிகுறிகளைக் குறிப்பிட கூடாது என இரத்த பரிசோதனை நிலையங்களை அதிகாரிகள் தொடர்ந்து மிரட்டுகிறார்கள். 

மேலும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் முறைகேடுகள் நடப்பது ஏற்கத் தக்கதல்ல. அந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்," என்றார்.

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...