கோவை: கோவை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பிரதமர் நரேந்திரமோடி சந்திக்க உள்ளதாக மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு காந்திபுரம் பகுதியில் உள்ள மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சி.பி. ராதாகிருஷ்ணன், "ஐந்து மாநில தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்தது எங்களுக்கு தாங்க முடியாத வேதனைத் தருவதாக உள்ளது. மக்கள் தீர்ப்பை மதித்து வெற்றி பெற்ற கட்சிகளுக்குப் பிரதமர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் தலைமையில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. வெற்றி பெற்றவுடன் நதி நீர் இணைப்புக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இந்த தோல்வி மூலம் எங்களை நாங்கள் மெருகேற்றிக் கொள்வோம்.
இதற்கிடையில், வாக்கு எண்ணிக்கையில் நோட்டாவுக்கு கீழ் சென்றாலும் துவண்டுவிடமாட்டோம். ஆர்.எஸ்.எஸ் எங்களுக்குப் போதித்தபடி, வாழும் வரை தேசத்திற்கு பணி செய்வோம். தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை பிரதமர் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் சந்திக்க உள்ளார்.

கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் வரும் 15-ம் தேதி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் எங்களிடம் பேச உள்ளார். இந்த வீடியோ கருத்தரங்கில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தொண்டர்களின் கருத்துக்களைக் கேட்க உள்ளார்.
கோவை மாவட்டத்திற்கு சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள பிருந்தாவன் அரங்கத்தில், 15 -ம் தேதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் சுமாராக 3000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது." என்றார்.
மேலும், இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.