திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியில் பூங்கா அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பொண்முத்து நகர் பகுதியில் 100 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பொன்முத்து நகர் 2 -வது வீதியில் குடியிருப்பு பகுதியின் மத்தியில் பூங்காவிற்கென தனி இடம் ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தில் நேற்றைய தினம் மாநகராட்சியின் மூன்றாவது மண்டல அதிகாரிகள் பொதுமக்களின் கருத்து கேட்காமலே, குப்பைகளைப் பிரித்தெடுக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள அளவீடு பணிகளை முடித்துச் சென்றுள்ளனர்.

இதையடுத்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குடியிருப்பு பகுதியின் மத்தியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைக்கப்பட்டால் சுகாதாரம் பாதிக்கப்படும் எனவும் கூறி பொதுமக்கள், திடக்கழிவு மேலாண்மைப்பணி நடைபெறவுள்ள இடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.