திருப்பூர் : உடுமலை நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் தங்களுக்குத் தர வேண்டிய நிலுவை தொகையைத் தராமல் இழுத்தடிப்பதாகக் கூறி நகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்டம் உடுமலை நகராட்சியில் 150 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இவா்களில் 103 பெண்களுக்கு கடந்த ஒரு வருடமாக வழங்க வேண்டிய நிலுவை தொகை சரியாக வழங்கப்படாததாகச் சொல்லப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ரூ.30 ஆயிரம் ரூபாய் வழங்கியிருக்க வேண்டிய சூழலில், அதனை வழங்காமல் பணியாளா்களை அலைகழித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
இதற்கிடையே, இன்று தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக அனைவருக்கும் வழங்கக் கோரி பெண் ஊழியா்கள் நகராட்சி அலுவலகம் முன் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

நடவடிக்கை எடுக்காவிடில், இன்று இரவிலும் தொடா்ந்து நகராட்சி வளாகத்திலேயே காத்திருக்க போவதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், நிலுவை தொகையை முழுமையாக வழங்காமல் போராட்டத்தை முடிக்க போவதில்லை என துப்புரவு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தொடா் போராட்டத்தினால் நகராட்சி பகுதிகளில் குப்பைகள் தேங்கும் வாய்ப்புள்ளது. எனவே, மக்களுக்கு சுகாதார கேடு ஏற்படும் அபாயத்தைக் குறைக்க நகராட்சி நிர்வாகம் துப்புரவு பணியாளா்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்ய முயற்சி மேற்கொள்கின்றனர்.