கோவை : அமிர்தா விரைவு ரயில் உடுமலைப்பேட்டை இரயில் நிலையத்தில் நின்று செல்ல தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் இறுதி மனு அளித்துள்ளார்.

பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் அவர்களின் பெரும் முயற்சியால் திருவனந்தபுரம் - மதுரை என்ற புதிய வழித்தடத்தில் அமிர்தா விரைவு ரயிலை இயக்கச் செய்தார். இருப்பினும், உடுமலைப்பேட்டை ரயில் நிலையத்தில் அமிர்தா விரைவு இரயில் நின்று செல்வது இல்லை. இதுகுறித்து, பலமுறை மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கும், ரயில்வே துறை வாரியத் தலைவருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் தொடர்ந்து மனுக்கள் அளிக்கப்பட்ட போதும் நடவடிக்கை ஏதும் இல்லை.
இதையடுத்து, இன்று மீண்டும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் அவர்களையும், ரயில்வே துறை வாரியத் தலைவர் திரு.யுத்வீர் சிங் மாலிக் அவர்களையும் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு.சி.மகேந்திரன் அவர்கள் டெல்லியில் நேரில் சந்தித்தார். அப்போது பலமுறை மனுக்கள் தந்தும் ரயில் நிறுத்தம் குறித்த எவ்விதமான நடவடிக்கைகளும் இல்லை என்ற தனது கோபம் கலந்த ஆதங்கத்தை வருத்தத்துடன் வெளிப்படுத்தினார்.

மேலும், எனது இறுதி மனு இது, போராட்டத்தை விரும்பாதவன் நான் இருப்பினும் பொதுமக்களின் நலன் சார்ந்த விசயங்களுக்காகக் கடுமையாக போராடுவேன். இதன் பின்பும் அமிர்தா விரைவு ரயில் நின்று செல்லாத நிலை நீடித்தால், உடுமலைப்பேட்டையில் ரயில் மறியல் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடக்கும் என வெளிப்படையாகக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், விரைவில் அமிர்தா விரைவு ரயில் உடுமலைப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்ல தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.