திண்டுக்கல் : மேட்டுப்பாளையம் அருகே நாளை நடைபெறவுள்ள யானைகள் புத்துணர்வு முகாமிற்கு புறப்பட்ட பழனி கோவில் யானை கஸ்தூரியை கோவில் இணை ஆணையர் செல்வராஜ் அனுப்பி வைத்தார்.

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் கோவில் யானைகள் புத்துணர்வு முகாம் நாளை நடைபெறவுள்ளது. இதற்கு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் யானை கஸ்தூரி இன்று புறப்பட்டது. 53 வயதான கஸ்தூரி யானையை 12 -வது முறையாகப் புத்துணர்வு முகாமிற்கு செல்வது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, கால்நடை மருத்துவக்குழுவினர் யானை கஸ்தூரியை பரிசோதனை செய்தனர். அந்தப் பரிசோதனையில் 4750 கிலோ எடையுடன் கஸ்தூரி யானை முழு உடற்தகுதியுடன் இருப்பதாகத் தெரிவித்த மருத்துவர்கள் யானைக்குக் குடல் புழு நீக்க மருந்து கொடுத்தனர்.
கஸ்தூரி யானை முழுத் தகுதியுடன் இருப்பதாக மருத்துவர்கள் சான்று அளித்ததைத் தொடர்ந்து, பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ் மற்றும் பொதுமக்கள் யானையை வழியனுப்பி வைத்தனர்.