சேலம் மாவட்டத்தில் புதிய வசதிகளுடன் தயாராகிறது இரட்டை அடுக்கு பேருந்து நிலையம்

தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளில் ஒன்றான சேலம், ஓமலூர்,ஆத்தூர்,மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி, வாழப்பாடி, கெங்கவள்ளி, ஏற்காடு மற்றும் சேலம் என 9 வட்டங்களைக் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளில் ஒன்றான சேலம், ஓமலூர்,ஆத்தூர்,மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி, வாழப்பாடி, கெங்கவள்ளி, ஏற்காடு மற்றும் சேலம் என 9 வட்டங்களைக் கொண்டுள்ளது. மேலும், 5 -வது பெரிய நகரம் என்ற பெருமையையும் இதற்கு உண்டு. இங்கு, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் என இரண்டு நிலையங்கள் உள்ளன. போஸ் மைதானத்தில் பழைய பேருந்து நிலையமும், சொர்ணபுரி பகுதியில் புதிய பேருந்து நிலையமும் அமைந்துள்ளது.

தொடக்கத்தில், பழைய பேருந்து நிலையத்தில் நகரப் பேருந்துகளும், புறநகர பேருந்துகளும் இயக்கப்பட்டன. நாளடைவில், ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக, வெளியூர் பேருந்துகளுக்கு என புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 50 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் பழைய பேருந்து நிலையம் இட நெருக்கடியால் அவதிப்படுகின்றது.

இதுகுறித்து, சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் கூறும்போது, பொலிவுறும் நகரம் திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையம் ரூ.92 கோடியே 13 லட்சம் மதிப்பில் அதிநவீன இரட்டை அடுக்கு பேருந்து நிலையமாக அமைக்கப்பட உள்ளது என்றார். மேலும், இந்தத் திட்டத்தை விரைவாக நிறைவேற்றித் தர வேண்டும் என்பது சேலம் பகுதி மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கென ரூ.198.85 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, இன்று சேலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பொலிவுறும் நகரத் திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைக்கிறார். புதியதாக அமையவுள்ள இரட்டை அடுக்கு பேருந்து நிலையத்தின் மாதிரி தற்போது தயார் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் சிறப்பாக, முழுக்க முழுக்க சூரிய ஒளி சக்தியில் (சோலார்) இயங்கும் வகையில் இந்தப் பேருந்து நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மேலும், இரண்டு தளமாக அமைக்கப்படும் இந்தப் பேருந்து நிலையத்தில் முதல் மற்றும் 2-வது தளங்களில் பேருந்துகள் நிற்பதற்கும், அங்குச் செல்வதற்கு பொதுமக்களுக்கு லிப்ட் வசதியும் அமைக்கப்பட உள்ளது. மேலும், பெண்களுக்கானப் பாதுகாப்பை உறுதி செய்யும் நவீன பாதுகாப்பு அறைகள், வணிகக் கடைகள், மொட்டை மாடி உணவகம், கீழ் தளத்தில் இருசக்கர வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.

மேலும், ஆனந்தா இறக்கம் பகுதியில் ரூ.7.90 கோடி மதிப்பில் அடுக்குமாடி வாகன நிறுத்தம், ரூ.4.30 கோடி மதிப்பில் நுண் உயிரி உரம் தயாரிக்கும் மையமும் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...