கோவை: பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜாவின் கொடும்பாவியை எரிக்க முயற்சித்த விடுதலைச் சிறுத்தை கட்சியினரை காவல்துறை கைது செய்தனர்.
கோவை: பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜாவின் கொடும்பாவியை எரிக்க முயற்சித்த விடுதலைச் சிறுத்தை கட்சியினரை காவல்துறை கைது செய்தனர்.

பிரச்சனைக்குரிய கருத்துக்களைக் கூறி அவ்வப்போது சர்ச்சைக்குள்ளாவது பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் வாடிக்கை. இந்தச் சூழலில், சமீபத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொட்ட கட்சியை யாரும் தொட மாட்டார்கள் என்ற கருத்தை எச்.ராஜா தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இதையடுத்து எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், கோவையில் எச்.ராஜாவைக் கண்டிக்கும் வகையில் அவரது உருவ பொம்மையை விசிக தொண்டர்கள் எரிக்க முயன்றனர். காந்திபுரம் பகுதியில் திரண்ட அக்கட்சி தொண்டர்கள் ராஜாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற போது போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி ஐந்து பேரை கைது செய்தனர்.

இது குறித்து அக்கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் குரு கூறுகையில், "தமிழக தலைவரை இழிவாகப் பேசியதற்கு எச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும். தொடர்ந்து சர்ச்சையை கிளப்பி வரும் அவரை உடனடியாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்." என்றார்.