மேட்டுப்பாளையத்தில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நாளைத் தொடக்கம்

கோவை : பவானியாற்று கரையோரப்பகுதியில் கோவில் யானைகளுக்குப் புத்துணர்வு அளிக்கும் வகையில் நலவாழ்வு புத்துணர்வு முகாம் நாளைத் தொடங்குகிறது.

கோவை : பவானியாற்று கரையோரப்பகுதியில் கோவில் யானைகளுக்குப் புத்துணர்வு அளிக்கும் வகையில் நலவாழ்வு புத்துணர்வு முகாம் நாளைத் தொடங்குகிறது.



மேட்டுப்பாளையம் பவானியாற்று கரையோரப்பகுதியான தேக்கம்பட்டியில், கடந்த 2012 -ம் முதல் கோவில் யானைகளுக்கான நலவாழ்வு புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு நடத்தும் இந்த முகாம் 48 நாட்கள் நடைபெறும். ஏழாவது ஆண்டான இந்த வருடம் யானைகள் முகாம் தொடங்குவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.



இதனையடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து அதன் யானைகள் லாரிகள் மூலம் மேட்டுப்பாளையதிற்கு வரத் தொடங்கியுள்ளன. கடந்த மூன்று வாரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த இதன் பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. அதனுடன், முகாமில் பங்கேற்கும் 30 -திற்கும் மேற்பட்ட யானைகள் மற்றும் அதன் பாகன்கள் தங்குமிடமும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாமில் உள்ள யானைகள் காலை, மாலை என இருவேளைகளும் நடைப்பயிற்சிக்குக் கொண்டு செல்லப்படும். ஆகவே, அதற்கான பகுதிகளும் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், யானைகள் புத்துணர்ச்சி பெறத் தினசரி ஷவர் பாத் எடுத்துக் கொள்ள வசதியாகப் படுத்தபடி குளிக்கத் தரைதளம் மற்றும் ஷவர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்தாண்டை விட இவ்வாண்டு கூடுதலாக யானைகள் குளிக்கும் இடங்கள் அமைக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



இதற்கிடையில், கோவில் யானைகள் தங்கியுள்ள இந்த முகாமிற்குள் காட்டு யானைகள் நுழைவதைத் தடுக்கும் வகையில் முகாமைச் சுற்றி சோலார் மின்வேலிகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நாளை நடைபெறப் போகும் முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்ற நிலையில் இன்று அதிகாலையில் இருந்தே பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோவில் யானைகள் முகாமிற்கு வரத் தொடங்கின.அதில், முதலாவதாக மயிலாடுதுறையைச் சேர்ந்த அபியாம்பிகை என்ற யானை மேட்டுப்பாளையம் வந்தடைந்து முகாமிற்குள் நுழைந்துள்ளது. 

மேலும், முதலில் எடை பரிசோதனை நடத்தப்பட்ட பின்னரே யானைகள் முகாமிற்குள் அனுமதிக்கப்படுகின்றன. முகாமிற்கு வரும் முன் அவற்றின் எடை எவ்வளவு, அதன் வயதிற்கேற்ப அவற்றின் எடை உள்ளதா என முதலில் கண்டறியப்பட்டு அதற்கேற்ற வகையில் முகாம் நடைபெறும். பிறகு வரும் நாட்களில் அவற்றுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். 



இந்நிலையில், முகாமிற்கு இது வரையிலும் 12 யானைகள் வந்துள்ள நிலையில், இன்று இரவுக்குள் அனைத்து யானைகளும் வந்தடையும் என்று நம்பப்படுகிறது. மேலும், நாளை அமைச்சர்கள் முன்னிலையில் துவங்கும் இந்த யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் ஜனவரி 30 -ம் தேதி வரை நடைபெறும்.

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...