கோவை : பல்வேறு சங்கங்கள் மூலமாகத் திரட்டப்பட்ட கஜா புயல் நிவாரண நிதியைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கோவையில் வைத்து நேற்றுப் பெற்றுக் கொண்டார்.
கோவை : பல்வேறு சங்கங்கள் மூலமாகத் திரட்டப்பட்ட கஜா புயல் நிவாரண நிதியைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கோவையில் வைத்து நேற்றுப் பெற்றுக் கொண்டார்.
கஜா புயல் காரணமாக பல்வேறு டெல்டா பகுதிகள் சீரழிந்ததைத் தொடர்ந்து அந்தப் பகுதி மக்களுக்கு, பல்வேறு அமைப்புகள் நிவாரண நிதி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து, நேற்று கோவை வருகை புரிந்த தமிழக முதல்வரிடம், கோவை ராஜஸ்தானி சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் இணைந்து திரட்டிய ரூ.11.15 லட்சம் நிதி காசோலையை கொடுத்தனர்.
இதற்கிடையில், தமிழக முதல்வர், ஆனைமலையை தலைமையிடமாகக் கொண்ட புதிய வட்டத்தைக் காணொளிக் காட்சி வாயிலாகத் தோற்றுவித்தார். அதற்குச் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோர் முன்னிலையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி பூங்கொத்து அளித்து நன்றி செலுத்தினார்.