நீலகிரி : முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகளை சவாரி அழைத்துச் சென்ற வனத்துறையின் வாகனத்தை காட்டு யானைகள் துரத்தும் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
நீலகிரி : முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகளை சவாரி அழைத்துச் சென்ற வனத்துறையின் வாகனத்தை காட்டு யானைகள் துரத்தும் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் வேன் மற்றும் ஜீப் மூலம் சவாரி அழைத்து செல்லப்படுகின்றனர். இந்த நிலையில், முதுமலைக்கு வந்த சில சுற்றுலாப் பயணிகள், வனத்துறை வாகனத்தில் வனப்பகுதிக்குள் சுற்றிப் பார்க்கச் சென்றனர். அங்கு அடர்ந்த வனப் பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் அமைதியாக மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தது. அப்போது, காட்டு யானைகளுக்கு அருகே நிறுத்தப்பட்ட வாகனத்தில் இருந்தவர்கள், அந்த யானை கூட்டத்தை தொந்தரவு செய்தனர். இதனால், கோபமடைந்த காட்டு யானை, அந்த வாகனத்தை துரத்த ஆரம்பித்தது.

பின்னர், அதன் அருகில் இருந்த மற்றொரு காட்டு யானை வந்தவுடன், இரண்டும் சேர்ந்து சுற்றுலாப் பயணிகள் வந்த வாகனத்தை விடாமல் துரத்தியுள்ளது. வாகன ஓட்டுநர் திறமையுடன் வாகனத்தை வேகமாக இயக்கி சற்று தொலைவில் நிறுத்தினார். இதனால், அந்த யானைகள் அருகே இருந்த வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து, வாகனத்தில் இருந்தவர்கள் பெருமூச்சுவிட்டனர். இந்த சம்பவம் அடங்கிய வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
