திருப்பூர் : தாராபுரம் அருகே வீட்டு மின் இணைப்பை விவசாய மின் இணைப்பாபக மாற்றுவதற்காக ரூ. 2,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலை பொறியாளர் லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்டார்.

தாராபுரம் மணக்கடவில் வீட்டு மின்இணைப்பை, விவசாய மின் இணைப்பாக மாற்ற குமார் என்பவரிடம் ரூ. 2,000 மணக்கடவு மின்வாரிய துறை இளநிலை பொறியாளர் கன்னிமுத்து லஞ்சமாகக் கேட்டுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த குமார், திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரனிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, ரசாயனம் தடவப்பட்ட 2,000 ரூபாய் நோட்டை குமாரிடம் கொடுத்துள்ளனர். அதனை, இளநிலை பொறியாளர் கன்னிமுத்துவிடம், குமார் லஞ்சமாகக் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு பதுங்கியிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இளநிலை பொறியாளர் கன்னிமுத்துவை கையும் களவுமாக கைது செய்தனர்.