கோவை : தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ரூ. 10,000 வரை அபராதம் விதிக்க கோவை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, மாற்றுப் பொருட்களை மக்களிடையே கொண்டும் பணிகளில் அனைத்து மாவட்டங்கள் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சியின் சார்பில், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை சட்டம், 2016-ன்படி, பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் காகிதங்கள் அல்லது பல அடுக்குகளைக் கொண்ட பிளாஸ்டிக் பேக்கிங் பொருட்களை தயாரிக்கவோ, விற்கவோ தடை செய்யும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சில்லறை வியாபாரிகள், தெரு வியாபாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை சட்டம், 2016-ன்படி அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சட்டவிரோதமாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், சில்லறை வியாபாரிகள், தெரு வியாபாரிகள் மற்றும் கோவை மாநகராட்சியிடம் பதிவு செய்யாத விற்பனையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ரூ. 10,000 வரை அபராதம் விதிக்க இந்த தீர்மானம் வழிவகை செய்கிறது.
50 மைக்ரானுக்கு கீழாக இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை தயார் செய்தல், இருப்பு வைத்தல், விற்பனை அல்லது கொண்டு செல்லுதல் ஆகியவற்றில் ஈடுபட்டால், ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும். மொத்த வியாபாரிகள், தரகர்கள், விநியோகஸ்தகர்களுக்கு ரூ. 10,000-மும், சில்லறை வியாபாரிகளுக்கு ரூ. 5,000-மும், தெரு வியாபாரிகளுக்கு ரூ. 2,000-மும், பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு ரூ. 100-ம் அபராதமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை சட்டம், 2016-ன் விதிகளின்படி, சில்லறை வியாபாரிகள், தெரு வியாபாரிகள் விற்கப்படும் பொருட்கள் பேக் செய்யப்பட்டிருக்கும் பைகளில் விதிமுறைகள் குறிப்பிடாமல் இருந்தால், ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.