கரூர்: கரூரைச் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் டி.டி.வி. தினகரனுடன் இணைந்து செயல்பட்டார். இந்த நிலையில், அவர் தி.மு.க.,வில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியானது.

கடந்த இருவார காலமாக செந்தில் பாலாஜியின் செயல்பாடுகளில் மாற்றம் காணப்படுவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் தெரிவித்து வந்த நிலையில், செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணையப் போவதாகவும், அக்கட்சி தலைமையுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வருகிற 16-ந் தேதி சென்னையில் நடைபெறும் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
அவருடன், அ.தி.மு.க., மற்றும் அ.ம.மு.க நிர்வாகிகள் சிலரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 6 எம்.எல்.ஏ.க்களும் கூட்டாக கட்சி தாவ இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இப்படியாக நம்பமுடியாத பல தகவல்கள் பரவி வந்த சூழலில், அவற்றை நம்ப வைக்கும் விதமாக ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.
செந்தில்பாலாஜி, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராசாவுடன் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படம் இருவரும் ஒன்றாக விமான நிலையம் சென்ற போது எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், செந்தில் பாலாஜி விரைவில் தி.மு.க.,வில் இணைவது உறுதியாகியுள்ளது.