கோவை : ரத்தினபுரி அருகே கைக்குழந்தையுடன் கர்ப்பிணி பெண் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : ரத்தினபுரி அருகே கைக்குழந்தையுடன் கர்ப்பிணி பெண் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரத்தினபுரி அருகே உள்ள தில்லைநகர் ரயில்வே கேட்டை ஆறுமாத கர்ப்பிணி பெண், தனது கைக்குழந்தையுடன் இன்று மதியம் சுமார் 2.50 மணியளவில் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது, எதிர்பாராமல் வந்த ரயில், இவர்கள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், கர்ப்பிணி பெண் உடல் இரண்டு துண்டாகி சம்பவ இடத்திலேயே பலியானார். அத்துடன், வயிற்றில் இருந்த 6 மாத சிசு மற்றும் கையிலிருந்த கைக்குழந்தையும் உயிரிழந்தது.
இந்த சம்பவம் குறித்து தற்போது ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல, இவர் தற்கொலை செய்து கொண்டாரா..? அல்லது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினாரா..? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நேரத்தில், தாய் சேய் மற்றும் கை குழந்தை என மூவரும் ரயிலில் அடிபட்டு பலியாகிய சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.