இடையூறு இல்லாத சேவைக்கு பி.எஃப் கணக்கு எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும் : கூடுதல் மத்திய பி.எஃப். ஆணையர்

கோவை : இடையூறு இல்லாத சேவையைப் பெற அனைத்து வாடிக்கையாளர்களுக்காவும் அறிமுகப்படுத்தப்பட்ட யுனிவெர்செல் பி.எஃப். கணக்கு எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும் என கூடுதல் மத்திய பி.எஃப். ஆணையர் எம். மதியழகன் தெரிவித்தார்.


கோவை : இடையூறு இல்லாத சேவையைப் பெற அனைத்து வாடிக்கையாளர்களுக்காவும் அறிமுகப்படுத்தப்பட்ட யுனிவெர்செல் பி.எஃப். கணக்கு எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும் என கூடுதல் மத்திய பி.எஃப். ஆணையர் எம். மதியழகன் தெரிவித்தார். 

இது தொடர்பாக கோவை இ.பி.எஃப்.ஓ. மண்டல அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- இ.பி.எஃப்.ஓ.வின் சார்பில் அனைத்து வாடிக்கையாளர்களுக்காகவும் யுனிவெர்செல் கணக்கு எண் தொடங்கப்பட்டு உள்ளது. எனவே, இந்த பி.எஃப் கணக்கு எண்ணை, ஆதாருடன் கட்டாயம் இணைக்க வேண்டும். இதன் மூலம், எதிர்காலத்தில் இடையூறு இன்றி சேவைகள் வழங்க முடியும். ஆதாரை இணைப்பதன் மூலம் பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள், தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்கள் என அனைத்து தரப்பினரும் ஆன்லைன் மூலமே தொகையைப் பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்கலாம். அதோடு, பி.எம்.ஆர்.ஒய். திட்டத்தின் கீழ் தொழிலாளர்களும் பல்வேறு பயன்களை அடையலாம். 



திருப்பூர், திருச்சி, நாகர்கோவில், மதுரை மற்றும் சேலம் மண்டலங்களைத் தொடர்ந்து கோவையில் ஆதார் எண் இணைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மேற்கண்ட 6 பிராந்திய அலுவலகங்களின் உதவியுடன் முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் 100 சதவீதம் யுனிவெர்செல் பி.எஃப். கணக்கு எண்ணை ஆதாருடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மொத்தம் 120 மாவட்டங்களில் இருந்து 2,500 நிறுவனங்கள் மற்றும் 3 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். குறிப்பாக, திருப்பூர் மாவட்டம் பி.எம்.ஆர்.ஒய். திட்டத்தின் கீழ் அனைத்து வாடிக்கையாளர்களின் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து சிறந்த இடத்தைப் பிடித்துள்ளது. அதேவேளையில், திருநெல்வேலி, திருச்சி ஆகிய பகுதிகளில் கே.ஒய்.சி. பதிவுகள் குறைந்த அளவுகளே உள்ளன. கோவையில், 64 சதவீதமும், சேலத்தில் 72 சதவீதமும் பதிவாகியுள்ளன. இந்த மாத இறுதிக்குள் குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...