கோவை : சூரிய சக்தி மூலம் விளக்கு, எச்சரிக்கை பலகை எனக் கோவை - பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கோவை : சூரிய சக்தி மூலம் விளக்கு, எச்சரிக்கை பலகை எனக் கோவை - பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கோவை ஈச்சனாரியில் இருந்து பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டி வரை 26.85 கிலோ மீட்டர் சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கியது. இந்தச் சாலை 36 மீட்டர் அகலத்துக்கு நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இந்தப் பணிக்காக ரூ.415 கோடி ஒதுக்கப்பட்டது.
இந்த நான்கு வழிச்சாலையில் நான்கு மேம்பாலங்கள் கிணத்துகிடவு, ஒத்தகால்மண்டபம், ஈச்சனாரி, முள்ளுபாடி ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டு வருகின்றன.இதனிடையே பால பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டன. தற்போது 90 சதவீதம் சாலை பணிகள் நிறைவடைந்த நிலையில் வாகன ஒட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து திட்ட மேலாளர் உதய் சங்கர் கூறுகையில், "சாலைப் பணிகள் நிறைவடைந்துள்ள பகுதிகளில், விபத்துக்களைத் தவிர்க்க வாகன ஒட்டிகளின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது. சென்டர் மீடியன், சோலார் சக்தி விளக்குகள், எச்சரிக்கை விளக்குகள், எச்சரிக்கை பலகைகள், தகவல் பலகைகள், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ள வளைவுகளில் தடுப்புகள் ஆகியவை அமைக்கப்படுகின்றன.
மேலும், மூன்று சாலைகள் சந்திக்கும் இடங்களில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. வரும் ஆண்டில் மார்ச் மாதம் அனைத்துப் பணிகளும் நிறைவடையும்," என்றார்.