உலகமெங்கும் 24 நாடுகளில் ஆன்லைன் டெலிவரியில் ஈடுபடும் சொமேட்டோ நிறுவனத்தின் மீது வைக்கப்பட்ட குற்றசாட்டுக்கு, புதிய பேக்கிங் முறையை அறிமுகப்படுத்தி அந்நிறுவனம் பதிலடி கொடுத்துள்ளது.

சொமேட்டோ நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் உணவு பொட்டலங்களை பிரித்து உண்ணும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இணையத்தில் உணவு டெலிவரி பரவலாகும் இச்சூழலில் சொமேட்டோ நிறுவனம் மேல் எழுந்த குற்றசாட்டுக்கு பெங்களூருவை கிளையைச் சேர்ந்த சொமேட்டோ நிறுவனம் பதிலளிக்கையில், " நேற்றிரவு சொமேட்டோ டி சர்ட் அணிந்து, சொமேட்டோ டெலிவரி பையுடன் ஊழியர் ஒருவர், ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளை உண்ணும் காணொளி ஒன்றினை காண நேர்ந்தது.
அவர் சொமேட்டோ வாடிக்கையாளருக்குக் கொடுக்க வேண்டிய உணவினை வழியிலே சாப்பிடுவது அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. இது தொடர்பாக சொமேட்டோ வாடிக்கையாளர்கள், உணவக உரிமையாளர்கள் மற்றும் அனைத்துப் பங்குதாரர்களிடமும் நாங்கள் இது போன்ற புகாரின் மேல் தீவிர நடவடிக்கை எடுப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்," என்றனர்.
மேலும், இது குறித்து சொமேட்டோ தரப்பினர் கூறுகையில், "அந்த ஊழியர் மதுரையைச் சேர்ந்தவர். மேலும், தமிழ்நாட்டில் 1.5 லட்சம் விநியோகர்கள் உணவை டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பயனாளிகள் கொடுக்கும் இது போன்ற புகார்களையும் நாங்கள் ஏற்று, விசாரணை நடத்தத் தயாராக இருக்கிறோம்.
பயனாளிகளுக்காகப் பலவகையில் தொடர்பு வழிகளை ஏற்படுத்தி, குறித்த நேரத்தில் தரமான உணவு வழங்குவதைச் சரியாக செய்துவருகிறோம். அப்படியிருக்கையில், அபூர்வமாக எப்போதாவது நடக்கக்கூடிய இது போன்ற புகார்களையும் கணக்கில் எடுத்து நடவடிக்கை மேற்கொள்ளத் தயார்," என்றனர்.
மேலும், தற்போது எழுந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக சொமேட்டோ உறுதியாக மூடிக்கொள்ளும் வகையில், டெம்பர் ப்ரூப் டப் (Temper proof- tab) பேக்கிங் முறையை அமல்படுத்தியுள்ளது.