திருப்பூர் : திருப்பூரில் போலி ஆவணங்கள் கொடுத்து வங்கியில் ரூ.1 கோடியே 3 லட்சம் கடன் பெற்ற சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் சாலையில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கியில், கடந்த 2008 -ம் ஆண்டு ஈரோட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (55), மற்றும் அவரது சகோதரர் செந்தில் (58), இருவரும் இணைந்து தொழில் துவங்க உள்ளதாகக் கூறி ரூ.1 கோடியே 3 லட்சம் கடன் பெற்றுள்ளனர். அதற்காகப் போலியான சொத்து பத்திரங்களை சமர்ப்பித்துள்ளனர்.

இதற்கிடையில், கடன் தொகையை திரும்பச் செலுத்தாமல் இருந்ததால் சந்தேகமடைந்த வங்கி அதிகாரிகள் ரவிச்சந்திரன் கொடுத்த ஆவணங்களைச் சரி பார்க்கையில், அவை போலியானவை என தெரிய வந்தது. இதனையடுத்து, வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் ரவிச்சந்திரன் மற்றும் அவரது சகோதரர் செந்தில் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.