திருப்பூர் மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு செயல்முறை கூட்டம்

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு செயல்முறை விளக்கக் கூட்டம் திருப்பூர் - பல்லடம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு செயல்முறை விளக்கக் கூட்டம் திருப்பூர் - பல்லடம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

வருகிற ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் இல்லா தமிழகமாக மாற்றுவது என முடிவு செய்து, அதற்கான ஆயத்த பணிகளில் அனைத்து மாவட்டங்கள் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பிளாஸ்டிக் ஒழிப்பிற்கான பணிகள் நடைபெற்று வருகிறது,

இந்த நிலையில், இன்று ஓட்டல் உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் தனியார் கடைகளின் உரிமையாளர்கள் ஆகியவர்களை உள்ளடக்கிய திடக்கழிவு மேலாண்மை மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு செயல்முறை விளக்கக் கூட்டம் மாநகராட்சி சார்பில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கிற்கு மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் ஆகியோர் தலைமை வகித்தார். இதில், மாநகராட்சி நகர்நல அலுவலர் பூபதி, முதல் மண்டல ஆணையாளர் வாசுகுமார், மூன்றாம் மண்டல ஆணையாளர் சபியுல்லா உள்ளிட்ட அரசு அலுவலகர்கள் மற்றும் தனியார் நிறுவன உரிமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர், மேலும், அரங்கிற்கு வெளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு கண்காட்சியும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...