திருப்பூரில் பழமை வாய்ந்த கோவிலில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் உற்சவர் சிலைகள் திருட்டு

திருப்பூர் : திருப்பூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த கோவிலில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் உற்சவர் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் : திருப்பூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த கோவிலில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் உற்சவர் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாமளாபுரம் அடுத்த கள்ளப்பாளையம் பகுதியில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த பெருமாள் கோவில் உள்ளது. நேற்று இரவு வழக்கம் போல, பூஜைகள் முடிந்து கோவிலை பூட்டிவிட்டு சென்ற நிலையில், இன்று கோவிலை திறக்க சென்ற போது கோவிலின் கருவறை கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அர்ச்சகர், உள்ளே சென்று பார்த்த போது, உள்ளிருந்த ஐம்பொன் உற்சவர் பெருமாள் சிலை மற்றும் ருக்மணி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டதை பார்த்து திகைத்துப் போனார். பின்னர், இது குறித்து மங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.



இதனையடுத்து, விரைந்து சென்ற போலீசார் ரூ. 5 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் பெருமாள் மற்றும் ருக்மணி உற்சவர் சிலைகள் மற்றும் அரை பவுன் தாலி உள்ளிட்டவை திருடப்பட்டிருந்ததை உறுதி செய்தனர். பின்னர், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...