திருப்பூர் : திருப்பூரில் வீட்டிற்குள் புகுந்த நாகப்பாம்பு தீயணைப்பு வீரரைக் கடித்த நிலையில், அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையில் தீயணைப்பாளராகப் பணியாற்றி வருபவர் செல்வகுமார் (35). திருப்பூர் மங்கலம் சாலையிலுள்ள பாரப்பாளையம் சிவசக்தி நகர் பகுதியில் உள்ள ராஜா என்பவர் வீட்டிற்குள் நாகப்பாம்பு புகுந்ததாக வந்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு பாம்பு பிடிப்பதற்காகச் சென்றார். அங்கு சென்று வீட்டிற்குள் இருந்த பாம்பை பிடித்து சாக்கு பையில் போட்டு கிளம்பும் போது, சாக்கு பையில் இருந்த சிறுதுளையின் வழியே தப்பிய அந்தப் பாம்பு தீயணைப்பு வீரர் செல்வகுமாரை கடித்துள்ளது.
இதனையடுத்து, உடன் சென்ற தீயணைப்பு வீரர்கள் செல்வகுமாரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மீட்புப் பணிக்காக சென்ற தீயணைப்பு வீரரை பாம்பு கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.