டெல்லி : ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியை உர்ஜித் படேல் ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய ஆளுநராக ஷக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி : ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியை உர்ஜித் படேல் ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய ஆளுநராக ஷக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரூபாய் விலை வீழ்ச்சியை சமாளிப்பது, பொதுத்துறை வங்கிகளை முறைப்படுத்துவது, வட்டி விகித நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதனால், கடந்த சில நாட்களாகவே ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் அதிருப்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில், நேற்று உர்ஜித் படேல் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ரிசர்வ் வங்கியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் வரும் 14-ம் தேதி நடைபெற இருந்த நிலையில், அவர் பதவியை ராஜினாமா செய்தார்.
சக்திகாந்த தாஸ், மத்திய நிதித்துறை செயலாளராக பணியாற்றியவர். மேலும் பொருளாதார விவகாரத்துறை, நிதித்துறை, வேதிப்பொருட்கள் துறை உள்ளிட்டவைகளின் செயலாளாரக சக்திகாந்த தாஸ் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராகவும், தமிழக தொழில்துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். சக்தி காந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் 25வது கவர்னர் என்பது குறிப்பிடத்தக்கது.