உலக மலைகள் தினத்தை முன்னிட்டு உதகையில் மாதந்திர காலண்டர் அறிமுகம்

நீலகிரி : உலக மலைகள் தினம் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் 200-வது ஆண்டு கொண்டாடும் வகையில், மாவட்ட ஆவணக் காப்பகம் சார்பில் ஓவியப் புகைப்படங்கள் அடங்கிய மாதாந்திர காலண்டர் இன்று உதகையில் அறிமுகம் செய்யப்பட்டது.


நீலகிரி : உலக மலைகள் தினம் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் 200-வது ஆண்டு கொண்டாடும் வகையில், மாவட்ட ஆவணக் காப்பகம் சார்பில் ஓவியப் புகைப்படங்கள் அடங்கிய மாதாந்திர காலண்டர் இன்று உதகையில் அறிமுகம் செய்யப்பட்டது. 

மலை மாவட்டமான நீலகிரியானது, அழகிய மலைகள், வெள்ளியை கரைத்து ஊற்றுவது போல் அழகிய நீர்வீழ்ச்சிகள், பச்சைக் கம்பளம் போற்றியது போன்ற தேயிலை தோட்டங்கள், அடர்ந்த காடுகள் என இயற்கை நிறைந்த மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடந்த 1819-ம் ஆண்டு அப்போதைய கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜான்சலிவன் என்பவர் நீலகிரி மாவட்டத்தைக் கண்டுபிடித்து கோத்தகிரி, கன்னேரி முக்கு கிராமத்தில் முதன்முதலாக கட்டிடம் கட்டி இங்கு தங்கினார். 



அவர், நீலகிரி மாவட்டத்தைக் கண்டுபிடித்ததுடன், தேயிலை தோட்டங்கள், மலை ரயில்பாதை, மின்சாரம் தயாரிக்கும் வகையில் பல அணைக்கட்டுகள், பல கட்டிடங்கள் போன்றவற்றை நீலகிரி மாவட்டத்திற்கு கொண்டு வந்தார். இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் தோற்றுவிக்கப்பட்ட 200-வது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், உலக மலைகள் தினத்தை முன்னிட்டும், நீலகிரி ஆவணக் காப்பகம் சார்பில் மாவட்டத்தின் சிறப்புகளை விளக்கும் புகைப்படங்கள் அடங்கிய காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது. 



குறிப்பாக, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட தேயிலை குறித்த வரலாறுகள், மலைரயில் பாதை அமைத்த வரலாறுகள், மின்சாரம் தயாரிக்கும் வரலாறுகள், மகாத்மா காந்தி முதன்முதலாக நீலகிரிக்கு வந்த வரலாறுகளை தற்போதைய இளைய தலைமுறையினர் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், அப்போதைய புகைப்படங்களை ஓவியங்களாக வரைந்து, அதன்குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. 



Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...