கேரள முதல்வர் பினராயி விஜயன் வருகையைக் கண்டித்து கோவை இந்து மக்கள் கட்சி ஆர்பார்ட்டம்

கோவை : சபரிமலை விவகாரத்தில் இந்துக்களுக்குத் துரோகம் விளைவித்தாக கூறி கேரள முதல்வரின் தமிழக வருகையைக் கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் கருப்பு பலூனை பறக்கவிட்டு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கோவை : சபரிமலை விவகாரத்தில் இந்துக்களுக்குத் துரோகம் விளைவித்தாக கூறி கேரள முதல்வரின் தமிழக வருகையைக் கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் கருப்பு பலூனை பறக்கவிட்டு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், சபரிமலையில் செல்ல முயன்ற 50 வயதுக்குட்பட்ட பெண்களை பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. 



நிலக்கல், பம்பை போன்ற பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கோசமிடவும், பாடல்கள் பாடவும், கூட்டமாக செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து தென்னிந்தியா முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. இதற்கெல்லாம் முக்கிய காரணம் கேரள முதல்வர் பினராயி விஜயன் தான் என இந்து அமைப்புகள் குற்றம் சாட்டின. இந்நிலையில், அவர் வரும் 16 -ம் தேதி தமிழத்தின் முன்னால் முதல்வர் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள இருக்கிறார். 



இந்நிலையில், சபரிமலை செல்வதற்கு மாற்று மதத்தினருக்கு அனுமதி அளிக்கக்கூடாது மற்றும் 144 தடை உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும், புதிதாக பினராயி விஜயன் தமிழகத்திற்கு வருகை தருவதை கண்டிக்கும் நோக்கில் 'திரும்பி போ பினராயி விஜயன்' ( go back pinaray vijayan ) என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, இந்த இயக்கத்தின் சார்பாக சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் முன்பு பினராயி விஜயன் தமிழகத்திற்கு வரக்கூடாது என்பதை வலியுறுத்தி இன்று கருப்பு பலூன் பறக்கவிடப்பட்டது. மேலும், இதுகுறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவிக்கையில், "இன்று முதல் தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் இணைந்து பினராயி விஜயனைக் கண்டித்து கருப்பு கொடி காட்டி கண்டனம் தெரிவிப்போம்," என்றார்.

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...