சொமட்டோ நிறுவனத்தில் பணிபுரியும் வாலிபர் டெலிவரி செய்ய போகும் வழியிலே, உணவு பார்சல்களை பிரித்து உண்ணும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சொமேட்டோ நிறுவனத்தில் பணிபுரியும் வாலிபர் டெலிவரி செய்ய போகும் வழியிலே, உணவு பார்சல்களை பிரித்து உண்ணும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் ஒட்டு மொத்தமாக 100 நகரங்களில், 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவகங்களுடன் இணைந்து உணவை ஆன்லைன் டெலிவரி செய்து வருகிறது சொமேட்டோ நிறுவனம். இந்நிலையில், நேற்று சொமேட்டோ நிறுவனத்தைச் சேர்ந்த டெலிவரி பாய் ஒருவர் சாலையின் ஓரமாக நின்று ஆன்லைன் டெலிவரி செய்ய வேண்டிய உணவு பொட்டலங்களை திறந்து அவசர அவசரமாக பசியாறிக் கொண்டிருந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைராலாகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சொமேட்டோ ஆப் அதிகாரிகளிடமும், உணவக உரிமையாளரிடமும் கேட்டபோது இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்கள். மேலும், சொமேட்டோ ஆப் தரப்பில், "இந்த வீடியோ போலியல்லாத நிலையில், சொமேட்டோ பயனர்கள், "இது ரொம்ப அபூர்வமாக நடக்கக்கூடியது" என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்" என்றது.
மேலும், சொமேட்டோ விரைவில், டிராபிக் தொல்லை இல்லாமல் உணவை வேகமாக டெலிவரி செய்ய ட்ரொன் எனப்படும் சிறிய வகை விமானங்களைப் பயன்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.