கோவையில் திடீரென தீப்பற்றிய வீடு : பொதுமக்கள் பரபரப்பு

கோவை : கோவையில் காய்கடை வீதியில், திடீரென வீடு தீப்பற்றி எறிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : கோவையில் காய்கடை வீதியில், திடீரென வீடு தீப்பற்றி எறிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை, லட்சுமி மில் அருகே உள்ள காய்கடை வீதியில் வசித்து வருபவர் சுரேஷ் பாபு. கூலித் தொழிலாளியான இவர் நேற்றிரவு தனது வீட்டில் இருந்து வெளியில் கிளம்பியிருக்கிறார். இந்நிலையில், சுமார் 9 மணியளவில் அவரது வீட்டில் இருந்து கரும்புகை கிளம்பியது. இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். 



இந்நிலையில், தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் மாடி வீட்டில் இருந்தும் மற்றும் திறந்த பகுதிகளிலிருந்தும் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதில், லேசாகப் பற்றிய தீ கட்டுக்குள் வந்தது. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தீ அணைக்கப்பட்டது. 

மேலும், திடீரென தீப்பற்றிய இச்சம்பவம் குறித்து, ரேஸ்கோர்ஸ் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...