கோவை : கோவையில் காய்கடை வீதியில், திடீரென வீடு தீப்பற்றி எறிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, லட்சுமி மில் அருகே உள்ள காய்கடை வீதியில் வசித்து வருபவர் சுரேஷ் பாபு. கூலித் தொழிலாளியான இவர் நேற்றிரவு தனது வீட்டில் இருந்து வெளியில் கிளம்பியிருக்கிறார். இந்நிலையில், சுமார் 9 மணியளவில் அவரது வீட்டில் இருந்து கரும்புகை கிளம்பியது. இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் மாடி வீட்டில் இருந்தும் மற்றும் திறந்த பகுதிகளிலிருந்தும் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதில், லேசாகப் பற்றிய தீ கட்டுக்குள் வந்தது. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தீ அணைக்கப்பட்டது.
மேலும், திடீரென தீப்பற்றிய இச்சம்பவம் குறித்து, ரேஸ்கோர்ஸ் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.